×

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படும் மாணவர்கள்; பச்சை கலர் புடவை கட்ட வற்புறுத்தப்படும் மாணவிகள்!

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசியல் கூட்டங்களுக்கு காசுக்கு ஆள் பிடிப்பதைப் போல ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு கூட்டம் சேர்க்க கல்லூரி மாணவ, மாணவிகளை வற்புறுத்துவதாக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளை ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இந்தக் கூட்டத்தில் படை பலத்தைக் காட்டுவதற்காக மெரினாவை ஓட்டிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை விழாவுக்கு அழைத்து வரும்படி அரசு கல்லூரி
 

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசியல் கூட்டங்களுக்கு காசுக்கு ஆள் பிடிப்பதைப் போல ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு கூட்டம் சேர்க்க கல்லூரி மாணவ, மாணவிகளை வற்புறுத்துவதாக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளை ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இந்தக் கூட்டத்தில் படை பலத்தைக் காட்டுவதற்காக மெரினாவை ஓட்டிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை விழாவுக்கு அழைத்து வரும்படி அரசு கல்லூரி பேராசியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அரசின் அழுத்தத்தால் பேராசிரியர்கள் மாணவிகளிடம் கெஞ்சி கூத்தாடி விழாவுக்கு அழைக்கு அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டிய ஆசிரியர்களை தங்களின் அரசியல் லாபத்திற்காக மரியாதைக் குறைவாக நடத்துவது அராஜகம் என்று பேராசிரியர்கள் தரப்பு முணுமுணுக்கிறது.

ஒரு சில ஆசிரியர்கள் கெஞ்சினாலும், இன்னும் சிலர் வருகைப் பதிவைக் கொண்டு பயம் காட்டி மாணவர்களை விழாவுக்கு வம்படியாக அழைப்பு விடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலைக் காரணம் காட்டி கிராம சபை கூட்டம், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பாராட்டு விழா உள்ளிட்டவற்றை ரத்துசெய்த அரசு, ஜெயலலிதா நினைவிட திறப்பை கோலகலாமாக நடத்துவது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

விழாவில் கலந்துகொள்ள வற்புறுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கென டிரெஸ் கோடாக மாணவிகளுக்கு பச்சை வண்ண சேலை கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பாடம் நடத்த வேண்டிய தங்களை இதுபோன்ற அநாகரிக செயல்களில் அரசு ஈடுபட வைப்பதாக பேராசிரியர்கள் நொந்துகொள்கின்றனர்.

ஏற்கனவே கல்லூரி மாணவர்களுக்கு நன்மை செய்வது போல கல்லூரிகளை திறக்காமலும் தேர்வுகளை நடத்தாமலும் அவர்களது வாக்குகளை அள்ள நினைக்கிறது அரசு. இச்சூழலில், விழாவை பிரச்சார மேடையாக்கி அங்கு வரும் மாணவர்களிடையே அதிமுக அரசு பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.