×

ஸ்டாலின் மகள் வீட்டில் திடீர் ரெய்டு.. பாஜக சொல்லும் விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் பிரமுகர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக காரணம் சொல்லப்பட்டாலும், இதன் பின்புலத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதாவது, பாஜக அரசை எதிர்த்து யார் நின்றாலும் உடனடியாக அவர்களுக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடத்தப்படுமாம். அப்படித்தான் அண்மையில், திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் அண்ணா
 

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் பிரமுகர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக காரணம் சொல்லப்பட்டாலும், இதன் பின்புலத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, பாஜக அரசை எதிர்த்து யார் நின்றாலும் உடனடியாக அவர்களுக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடத்தப்படுமாம். அப்படித்தான் அண்மையில், திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் அண்ணா நகர் திமுக வேட்பாளர் மகன் கார்த்திக் மோகன் வீட்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

இத்தகைய சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது மருமகன் சபரீசன் இல்லத்திலும் சோதனை நடக்கிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும், விசிக தலைவர் திருமாவளவனும் இந்திய கம்யூனிஸ்டு முத்தரசனும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஐ.டி.ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு திமுக எப்போதும் அஞ்சாது என அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், அரசியல் காரணத்துக்காக ஐ.டி.ரெய்டை மத்திய அரசு நடத்தவில்லை பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் காரணமாக பாஜக மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.