×

முதல்வர் ஸ்டாலின் மறைமுக உத்தரவு… காலியான கருணாநிதி படம்!

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சராகப் பதவியேற்றதும் அண்ணா, கருணாநிதி, பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதலமைச்சரான பின் தலைமைச் செயலகத்துக்கு முதல் முறையாக வந்தார். அங்கு வந்த அவர் முதலமைச்சர் அறைக்குச் சென்று முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த ஐந்து அறிவிப்புகளில் மகளிருக்குப் பேருந்து கட்டணம் இலவசம் என்பது இன்றே அமலுக்கு வந்தது. கொரோனா நிவாரணத்தின் முதல் தவணையாக 2,000 ரூபாய்
 

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சராகப் பதவியேற்றதும் அண்ணா, கருணாநிதி, பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதலமைச்சரான பின் தலைமைச் செயலகத்துக்கு முதல் முறையாக வந்தார். அங்கு வந்த அவர் முதலமைச்சர் அறைக்குச் சென்று முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அந்த ஐந்து அறிவிப்புகளில் மகளிருக்குப் பேருந்து கட்டணம் இலவசம் என்பது இன்றே அமலுக்கு வந்தது. கொரோனா நிவாரணத்தின் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே 10ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு அறிவிப்புகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இச்சூழலில் மறைமுக உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் ஸ்டாலின்.

நேற்று தலைமைச் செயலகத்திற்குச் சென்ற ஸ்டாலின், செயலகத்தின் முகப்பில் கருணாநிதியின் படமும், அவரின் படமும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார். ஸ்டாலினுக்கு அந்தப் படங்கள் இருப்பது முன்கூட்டியே அதிகாரிகள் யாரும் தெரிவிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் படம் இருந்ததை அகற்றி கருணாநிதி, ஸ்டாலிப் ஆகியோரது படங்களை அதிகாரிகள் மாற்றி வைத்திருக்கின்றனர்.

இதைக் கவனித்த ஸ்டாலின் அங்கிருந்த அதிகாரிகளிடம், “தலைமைச் செயலகம் கட்சி அலுவலகம் அல்ல. இங்கே என் படங்களோ கருணாநிதி படங்களோ வைக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாக அகற்றுங்கள்” என்று கூறியிருக்கிறார். அவர்கள் உடனடியாக அந்தப் படங்களை அகற்றியுள்ளனர்.