×

மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.. சோனியா காந்தி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் எழுந்து தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது என சோனியா காந்தி தெரிவித்தார். கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் நாடு மிகவும் இடர்பாடான சூழ்நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 4.01 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த சூழ்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது கடமைகளை செய்ய வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். சோனியா காந்தி இது
 

மத்திய, மாநில அரசுகள் எழுந்து தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது என சோனியா காந்தி தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் நாடு மிகவும் இடர்பாடான சூழ்நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 4.01 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த சூழ்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது கடமைகளை செய்ய வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள்

சோனியா காந்தி இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நாட்டில் கோவிட் நெருக்கடியை கையாளுவதற்கு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். அது குறித்து அரசியல் ஒருமித்த கருத்தை கொண்டு வாருங்கள் என மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் எழுந்து தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

பணம்

நாட்டின் தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்த தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மருந்து நிறுவனங்களுக்கு கட்டாய உரிமம் வழங்க வேண்டும். தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள உதவும் வகையில் ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் வங்கி கணக்கிலும் மத்திய அரசு ரூ.6 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் கள்ளசந்தை விற்பனையை தடுக்க வேண்டும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் காங்கிரஸ் நிற்கும். இந்த சோதனையாக காலத்தில் அனைத்து இந்தியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.