×

மாநிலங்களை தேர்தலில் கணிசமான வெற்றி … நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இனி பா.ஜ.க. ஆதிக்கம்…

இந்திய தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் மாதத்தில் 55 உள்பட மொத்தம் 61 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலை அறிவித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்தது. இருப்பினும் முதலில் 42 உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று பாக்கியுள்ள 19 மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்தல் நடைபெற்றது. ஆக, 61 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் பா.ஜ.க. அதிகபட்சமாக 17 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களுடன் திருப்திப்பட்டு கொண்டது. பா.ஜ.க.
 

இந்திய தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் மாதத்தில் 55 உள்பட மொத்தம் 61 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலை அறிவித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்தது. இருப்பினும் முதலில் 42 உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று பாக்கியுள்ள 19 மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்தல் நடைபெற்றது.

ஆக, 61 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் பா.ஜ.க. அதிகபட்சமாக 17 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களுடன் திருப்திப்பட்டு கொண்டது. பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஜே.டி.யூ. 3 இடங்களை தன்வசப்படுத்தியது. பி.ஜே.டி., டி.எம்.சி. ஆகிய கட்சிகள் தலா 4 இடங்கள், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியவை தலா 3 இடங்களை தங்கள் வசம் கொண்டு வந்தன. என்.சி.பி., ஆர்.ஜே.டி. மற்றும் டி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றது. எஞ்சிய 10 இடங்களை இதர கட்சிகள் கைப்பற்றின.

இதனையடுத்து 245 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணி்க்கை 86ஆக உயர்ந்துள்ள்து. அதேசமயம் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 41ஆக உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 100ஆக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. (9), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (6) மற்றும் நட்பு ரீதியான பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சிறிய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் எந்தவொரு மசோதாக்களை நிறைவேற்றுவதில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் இருக்காது. கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 300க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தற்போது மாநிலளங்களையிலும் அதன் பலம் அதிகரித்துள்ளதால் இனி இரண்டு அவைகளிலும் பா.ஜ.க. தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.