×

உளவு விவகாரம்.. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை… மத்திய அரசை விமர்சனம செய்த சிவ சேனா

ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை என்று மத்திய அரசை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி
 

ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை என்று மத்திய அரசை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று கடந்த வாரம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.

பெகாசஸ் சாப்ட்வேர்

எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்சினையை நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கினர். மேலும் உளவு விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் மோடி மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. அதேசமயம், மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கூறுகையில், பெகாசஸ் உளவு சம்பவம் புதிதல்ல, இது போன்ற உளவு மற்றும் தொலைபேசி ஒட்டுகேட்டல் சம்பவங்கள் 10-15 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தற்போதை நரேந்திர மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி

இந்நிலையில் பெகாசஸ் பிரச்சினையில் மத்திய அரசை சிவ சேனா மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது. சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில், ராகுல் காந்தி உள்பட மத்திய அரசை விமர்சித்த 1,500க்கும் மேற்பட்ட நபர்களின் தொலைப்பேசி எண்கள் ஒட்டுகேட்கப்பட்டன. கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டது. யார் நிதியளித்தனர்? மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இது இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை. இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்ற குழுவும், உச்ச நீதிமன்றமும் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.