×

‘பக்கத்தில் நிற்க வைத்து’ அதிமுகவினரை சம்பவம் செய்த சீமான்!

1978ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல தமிழகத்திலுள்ள 68 சமுதாய மக்களைப் பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க வேண்டும் என்று சீர்மரபினர் நலச்சங்கத்திடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. தொடர் போராட்டங்கள் நடத்தி அதன்மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபினர் சமூகத்தினர் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை கடுமையாக
 

1978ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல தமிழகத்திலுள்ள 68 சமுதாய மக்களைப் பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க வேண்டும் என்று சீர்மரபினர் நலச்சங்கத்திடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. தொடர் போராட்டங்கள் நடத்தி அதன்மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபினர் சமூகத்தினர் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை கடுமையாக எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க கோரிக்கை வைத்தது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் அதிமுக அரசு தட்டிக்கழிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். குறிப்பாக அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் மக்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். இந்த விவகாரம் எதிர்க் கட்சிகளின் தேர்தல் வியூகமாக மாறியிருக்கிறது. சீர்மரபினர் இருக்கும் தொகுதிகளில் இதுதொடர்பாகப் பேசியும் அதிமுக அரசை விமர்சித்தும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

அந்த வகையில் இரு நாட்களுக்கு முன் உசிலம்பட்டியில் நாம் தமிழர் வேட்பாளர் ஐந்து கோவிலானுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்துவந்தார். அவர் பிரச்சாரம் செய்த இடத்தில் அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சிக் கொடியை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்தனர். பிரச்சாரத்தில் சீர் மரபினர் குறித்துப் பேச ஆரம்பித்த சீமான், “வரலாற்றில் நம்மை ஒடுக்கி வச்சிருந்ததால் Denotified Tribes (DNT) என்று வகைப்படுத்திருந்தார்கள்.

சீர்மரபினர் பழங்குடியினர் என்பதால் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைத்தன. தற்போது அது Denotified Community (DNC) என்று மாற்றப்பட்டுள்ளது. அப்படி மாத்துனது யாருனு தெரியும்ல இந்த கொடி (அதிமுக கொடியுடன் நின்ற தொண்டர்கள்) பிடிச்சி நிக்குறாங்களே இவங்க தான். ஆனா நீங்க இன்னும் இந்த கொடியையும் சின்னத்தையும் நம்பிட்டு இருக்கீங்க” என்று நறுக்கென்று அவரின் டிரேட் மார்க் சிரிப்புடன் உரையை முடித்துக்கொண்டார்.

தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதிமுகவினரை அருகில் வைத்துக்கொண்டே தரமான செய்கை என சீமானைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கின்றனர். முன்னதாக நேர்காணலில் பேசியிருந்த சீமான், அதிமுகவையும் அமமுகவையும் இணைக்க எடப்பாடியிடம் பேசிப் பார்க்கவா என்று சசிகலாவிடம் கூறியிருந்தேன் என்றார். இதற்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அதற்குப் பிராயசித்தம் தேடியிருக்கிறார் சீமான்.