×

எங்களுக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்ல…போட்டுப் பாருங்க ஓட்ட, அப்புறம் பாருங்க நாட்ட!- சீமான்

மீஞ்சூரில் பிரச்சாரத்தில் பேசிய சீமான், “37 லட்சம் குடும்ப வருமானமாக உயர்த்திய பிறகு, 1000 ரூபாய் எதற்கு. அவர் 1000ரூபாய்,இவர் 1500 என இந்த 1500ரூபாய் எங்கிருந்து கொடுப்பீர்கள். பணத்தை கொடுக்க மாட்டோம், நீங்கள் சம்பாதிக்க வசதியாக அனைவருக்கும் வேலை கொடுப்போம். படிக்காத மக்களே இல்லை என்னும் நிலையை உருவாக்குவோம்; 72 ஆண்டுகால இந்தியாவில் படிக்காத மக்களை வைத்திருந்தது ஏன்?. இரட்டை இலை, உதயசூரியனை விட்டுவிட்டால் வேறு சின்னம் இல்லை என்கிறார்கள். நாங்கள் விவசாயி சின்னம் இருக்கிறோம்.
 

மீஞ்சூரில் பிரச்சாரத்தில் பேசிய சீமான், “37 லட்சம் குடும்ப வருமானமாக உயர்த்திய பிறகு, 1000 ரூபாய் எதற்கு. அவர் 1000ரூபாய்,இவர் 1500 என இந்த 1500ரூபாய் எங்கிருந்து கொடுப்பீர்கள். பணத்தை கொடுக்க மாட்டோம், நீங்கள் சம்பாதிக்க வசதியாக அனைவருக்கும் வேலை கொடுப்போம். படிக்காத மக்களே இல்லை என்னும் நிலையை உருவாக்குவோம்; 72 ஆண்டுகால இந்தியாவில் படிக்காத மக்களை வைத்திருந்தது ஏன்?. இரட்டை இலை, உதயசூரியனை விட்டுவிட்டால் வேறு சின்னம் இல்லை என்கிறார்கள். நாங்கள் விவசாயி சின்னம் இருக்கிறோம். சாலை ஒப்பந்தம் போட்டால் என்ன விலை என்பதை வெளிப்படையாக அறிவிப்போம், 10 ரூபாய் சுருட்டினாலும் மக்களுக்கு தெரிந்து விடும்.

வேளாண்மையை அரசு பணியாக மாற்றினால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியும். ஆடு, மாடு வளர்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். வேளாண்மையை அரசு வேலையாக மாற்றி விட்டால் ஒட்டகம் மேய்ப்பது போன்ற வேலைகளுக்கு வெளிநாடு செல்ல தேவையில்லை. குற்றம் நடக்க விடாமல் காவல்துறை சீரமைக்கப்படும். மக்களை நம்பிதான் தனியாக தேர்தலில் நிற்கிறோம், யாரிடம் வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கலாம். அரசியல் வாரிசு, பணபலம் படைத்த வேட்பாளர் கிடையாது. காலங்காலமாக அதிமுகவிற்கும், திமுகவிற்கும் வாக்களித்து 1000 ரூபாயை வாங்கும் நிலையில் தான் வைத்திருக்கிறார்கள். மக்களை நம்பி தான் தேர்தலில் தனித்து நிற்குறோம். போட்டுப் பாருங்க ஓட்ட, அப்புறம் பாருங்க நாட்ட!

மாற்றத்தை விரும்புகிற எவரும் நாம் தமிழரை ஆதரிப்பார்கள்;. அதிமுகவிற்கு திமுக மாற்று இல்லை, திமுகவிற்கு மாற்று அதிமுக கிடையாது. நாம் தமிழர் கட்சியினர் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் அல்ல, பல ஆயிரம் கோடி சொத்துக்களை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. நல்ல அரசியலை உருவாக்குவதும், நல்ல அரசை உருவாக்குவது தான் இப்போதைய தேவை. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்து மறுபடியும் அதே ஏழ்மை நிலையில் சிக்கி தவிக்காதீர்கள். வேளாண் குடிமகன் வாழ்ந்தால் நாடு வாழும், வேளாண் குடிமகன் அழிந்தால் நாடு சுடுகாடாகும்” என பேசினார்.