5 மாஜிக்களும் தப்ப முடியாது..ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் ரகசிய ஆய்வு!
ரெய்டில் சிக்கிய 5 மக்கள் மீதும் விரைவில் நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
முன்னாள் அமைச்சகள் எம். ஆர் .விஜயபாஸ்கர், எஸ். பி. வேலுமணி, கே. சி., வீரமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு நடத்தி இருக்கிறது. இந்த ரெய்டின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விராலிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய ஆவணங்களைக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய ஆய்வு நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக கொடுத்த புகார்களின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் சட்ட நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தப்ப முடியாது. அவர்கள் மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்.