×

‘அதிமுக பொதுக்குழு’ வழக்கில் டிடிவி தினகரன் பெயரை தூக்கிய சசிகலா!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் டிடிவி தினகரன் பெயரை நீக்கி சசிகலா புதிய திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். எதிர்பாராத விதமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சசிகலாவை
 

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் டிடிவி தினகரன் பெயரை நீக்கி சசிகலா புதிய திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். எதிர்பாராத விதமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியும் தினகரனை துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலாவும் தினகரனும் சென்னை நகர 4வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் மதுசூதனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சசிகலா பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கி விட்டதால் வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதாக தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பிலான பிரதான வழக்கிலிருந்து தினகரன் பெயரை நீக்கி புதிய திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.