×

நிச்சயம் அதிமுகவில் மூவரும் ஒன்றிணைவோம்- சசிகலா

 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நிச்சயம் அதிமுகவில் மூவரும் ஒன்றிணைந்து சந்திப்போம் என சசிகலா நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பொதுச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. சிறையில் இருந்த படியே தனது பதவியை மீட்டெடுப்பதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய போது அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே வந்தடைந்தார். அதிமுகவினரால் அதை தடுக்க முடியவில்லை. அதன் பிறகும் கூட, எங்கு சென்றாலும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே தான் செல்கிறார். அதே போல, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து பேச திட்டமிட்டிருக்கும் சசிகலா ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்ட அதே காரில் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாது அதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கைவிடுவதும், நிச்சயம் அதிமுக தலைமை அலுவலகம் செல்வேன், கட்சிக்கு தலைமை தாங்குவேன் எனவும் பேசிவருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கிய சசிகலா, ஊத்துக்கோட்டையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “முதல்வர் கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி கண்காணித்து சத்தான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிமுகவில் பொதுச்செயலாளர் முடிவெடுப்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களால்தான்.கொசஸ்தலை  ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.