×

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு?

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு, நீதிமன்றம் ரூ.10 கோடி அபராதம் விதித்தது. சிறையில் இருந்து விடுதலையாகும் போது அந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. நன்னடத்தை காரணமாக அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தது. இதனையடுத்து சத்தியமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ
 

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு, நீதிமன்றம் ரூ.10 கோடி அபராதம் விதித்தது. சிறையில் இருந்து விடுதலையாகும் போது அந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. நன்னடத்தை காரணமாக அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தது.

இதனையடுத்து சத்தியமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் சிறைத்துறையிடம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த சிறைத்துறை, ஜனவரி மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் ஜனவரிக்கு முன்னதாகவே அவர் விடுதலை செய்யப்படலாம் என்றும் டிடிவி தினகரன் அதற்கான முழு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என கர்நாடக சிறைத்துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் சசிகலா செலுத்தி விட்டார். இந்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்திருக்கும் சூழலில், சசிகலா விடுதலையானால் அதிமுகவில் பெருங்குழப்பம் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.