×

ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தினார் சசிகலா: முன்கூட்டியே விடுதலையா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த 2017ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறை விதிகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதமே அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா விடுதலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக சிறைத்துறை, அவர் ஜனவரி மாதம் விடுதலை
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த 2017ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறை விதிகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதமே அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா விடுதலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

இதை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக சிறைத்துறை, அவர் ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்திருந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய முனைப்பு காட்டி வருகிறார் டிடிவி தினகரன். அண்மையில் அவர் மேற்கொண்ட திடீர் டெல்லி பயணம் இதனை உறுதிப்படுத்தியது.

அதாவது சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தி, சசிகலாவை விடுதலை செய்ய ஏற்பாடு தினகரன் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. சசிகலாவும் அதற்கான மனுவை பெங்களூரு சிறையில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தியதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஜனவரி மாதத்திற்கு முன்னரே விடுதலை செய்யப்படுவார் என பரவலாக பேசப்படுகிறது.