×

டிரெண்டிங்கான சசிகலா.. #TNwelcomesசின்னம்மா

சசிகலா நாளை காலை பெங்களூரு விடுதியில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார். இதை முன்னிட்டு அமமுகவினர் #TNwelcomesசின்னம்மா , #அதிமுகவை_மீட்போம் #StrongLeaderசின்னம்மா #WelcomeRajamadha என்ற ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர். அதில், #TNwelcomesசின்னம்மா என்ற ஹேஷ்டேக் சென்னை டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. கர்நாடக தமிழக எல்லையில் மூன்று இடங்களில் அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஓசூரில் இருந்து சென்னை வரைக்கும் 5 மண்டலங்களாக பிரித்து அந்த ஐந்து மண்டலங்களிலும் சசிகலாவை
 

சசிகலா நாளை காலை பெங்களூரு விடுதியில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார். இதை முன்னிட்டு அமமுகவினர் #TNwelcomesசின்னம்மா , #அதிமுகவை_மீட்போம் #StrongLeaderசின்னம்மா #WelcomeRajamadha என்ற ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர். அதில், #TNwelcomesசின்னம்மா என்ற ஹேஷ்டேக் சென்னை டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

கர்நாடக தமிழக எல்லையில் மூன்று இடங்களில் அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஓசூரில் இருந்து சென்னை வரைக்கும் 5 மண்டலங்களாக பிரித்து அந்த ஐந்து மண்டலங்களிலும் சசிகலாவை வரவேற்க ஏற்பாடு செய்துள்ளனர். ஓசூரில் இருந்து சென்னை வரைக்கும் வழிநெடுகிலும் பேனர், போஸ்டர், கட்டவுட், தோரணங்கள் என்று தடபுடலாக செய்து வருகின்றனர் அமமுகவினர்.

இது தவிர டுவிட்டரில் சசிகலாவுக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் தந்து அதிரவைத்து வருகிறார்கள்.