×

நடராஜன் சமாதியில் சசிகலா? “தரிசனம் செய்யனும்; அரசியல் பேச வரல” – சொல்லிவிட்டு சிட்டாக பறந்த கார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையாகி பிப்ரவரி மாதம் தமிழகம் திரும்பினார். இங்கு வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றும் வேலைகளை ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ சைலன்ட் மோடிலேயே இருந்தார். இச்சூழலில் ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியே வந்த சசிகலா அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்ற ரீதியில் பேசி மீண்டும் வீட்டுக்குள்ளேயே சென்றுவிட்டார். திடீரென்று யாரும் எதிர்பாரா விதமாக அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து ட்விஸ்ட் வைத்தார். இதற்குப் பின் சென்னையில் கொஞ்ச நாள் இருந்த சசிகலா
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையாகி பிப்ரவரி மாதம் தமிழகம் திரும்பினார். இங்கு வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றும் வேலைகளை ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ சைலன்ட் மோடிலேயே இருந்தார். இச்சூழலில் ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியே வந்த சசிகலா அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்ற ரீதியில் பேசி மீண்டும் வீட்டுக்குள்ளேயே சென்றுவிட்டார். திடீரென்று யாரும் எதிர்பாரா விதமாக அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து ட்விஸ்ட் வைத்தார்.

இதற்குப் பின் சென்னையில் கொஞ்ச நாள் இருந்த சசிகலா நேற்று திடீரென சொந்த மாவட்டமான தஞ்சாவூருக்கு கிளம்பினார். நள்ளிரவில் தஞ்சாவூர் சென்றடைந்த அவர் அருளானந்த நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். இன்று காலை தனது கணவரின் சொந்த ஊரான விளாருக்குச் சென்றார். விளாரில் உறவினர் வீட்டு காது குத்து விழாவில் கலந்துகொண்டுள்ளார். அதன்பின் அங்கிருந்து கிளம்பி கும்பகோணம் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சாமி கோயிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சுமார் 1 மணி நேரம் தரிசனம் செய்த அவர், பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முற்படுகையில், கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன்; வேற எந்த சமாச்சாரமும் இல்லை என்று கூறி விட்டு காரில் பறந்துசென்றார். வரும் 20ஆம் தேதி நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் விளாரில் உள்ள அவரது சமாதியில் நடைபெறவுள்ளது. சசிகலா இதில் கலந்து கொண்டபின் சென்னை திரும்பவுள்ளார்.