×

நடிகைக்காக நீதி கேட்டவர்கள் ஹத்ராஸ் சம்பவத்துக்கு பிறகு அமைதியாகி விட்டார்கள்…. சஞ்சய் ரவுத்

நடிகை கங்கனா ரனாவத்துக்காக நீதி கேட்டவர்கள் ஹத்ராஸ் சம்பவத்துக்கு பிறகு அமைதியாகி விட்டார்கள் என கங்கனாவையும், அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் விமர்சனம் செய்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், சிவ சேனாவுக்கும் அண்மையில் கடும் வார்த்தை போர் நிலவியது. கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிகை கங்கனா ரனாவத்தை சஞ்சய் ரவுத் சீண்டியுள்ளார். சிவ சேனாவின் பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ரவுத்
 

நடிகை கங்கனா ரனாவத்துக்காக நீதி கேட்டவர்கள் ஹத்ராஸ் சம்பவத்துக்கு பிறகு அமைதியாகி விட்டார்கள் என கங்கனாவையும், அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் விமர்சனம் செய்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், சிவ சேனாவுக்கும் அண்மையில் கடும் வார்த்தை போர் நிலவியது. கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிகை கங்கனா ரனாவத்தை சஞ்சய் ரவுத் சீண்டியுள்ளார். சிவ சேனாவின் பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை மற்றும் மகாராஷ்டிராவுக்கு எதிராக கங்கனா ரனாவத்தின் அடிப்படை ஆதாரம் இல்லாத கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் அவரது சட்டவிரோத கட்டிடத்தை இடித்தற்கு அவருக்கு நீதி கேட்டவர்கள தற்போது அமைதியாக உள்ளனர்.

சஞ்சய் ரவுத்

ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரும் போது அவர்கள் கண்ணுக்கு தெரியாததாகிவிட்டது. ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவர் ஒரு பிரபலமானவர் அல்ல, அவர் போதைப்பொருள் இல்லை, பல கோடி ரூபாய் செலவழித்து எந்தவொரு சட்டவிரோத கட்டுமானமும் (கட்டப்பட்டது) அவளிடம் இல்லை. அவர் ஒரு எளிய பெண், அவள் இறந்த அன்றே அவளது உடல் இரவில் சட்டவிரோதமாக எரிக்கப்பட்டது. இதெல்லாம் யோகியின் ராம்ராஜ்யத்தில் நடந்தது.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் தகனம்

இந்து பெண்கள் கடத்தப்பட்டார்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் மற்றும் கொலை செய்யப்பட்டார்கள் போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்ததாக நாம் கேட்டு இருப்போம். ஹத்ராஸில் என்ன நடந்ததோ அதற்கும் இதற்கும் (பாகிஸ்தான் சம்பவங்கள்) வித்தியாசம் இல்லை. இதுவரை யாரும் ஹத்ராஸை பாகிஸ்தான் என்று கூறவில்லை. ஹத்ராஸ் போன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்து இருந்தால் மாநில அரசை கலையுங்க, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க என கோரிக்கை எழுந்திருக்கும். 2014 முதல் 2019 வரை உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசத்தில் மொத்தம் 12,257 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்புகளை கருத்தில் கொண்டு நீதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.