×

“வெற்றிநடை போடும் தமிழகமே”… 160 அடியில் ‘எடப்பாடியாரின்’ மணற்சிற்பம்!

தமிழக தேர்தல் நெருங்கிவரும் வேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். சசிகலா விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும், தான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக மக்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார் முதல்வர். நான்காண்டுகளில் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களைக் கூறி அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறார். அந்தச் சமயத்தில் சசிகலா, ஸ்டாலின் ஆகியோரை விமர்சிப்பதையும் அவர் தவறவிடுவதில்லை. வெற்றிநடை போடும் தமிழகமே என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இந்த முழக்கம் டிவி, ரேடியோ, சமூக வலைதளங்கள் என நாலாபுறமும்
 

தமிழக தேர்தல் நெருங்கிவரும் வேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். சசிகலா விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும், தான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக மக்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார் முதல்வர். நான்காண்டுகளில் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களைக் கூறி அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறார். அந்தச் சமயத்தில் சசிகலா, ஸ்டாலின் ஆகியோரை விமர்சிப்பதையும் அவர் தவறவிடுவதில்லை.

வெற்றிநடை போடும் தமிழகமே என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இந்த முழக்கம் டிவி, ரேடியோ, சமூக வலைதளங்கள் என நாலாபுறமும் முழங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த முழக்கம் மாமல்லபுர கடற்கரையில் மணற்சிற்பமாகவும் மாறியிருக்கிறது. மாமல்லபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்ற உருவத்தை மணலால் சிற்பமாக்கியுள்ளனர். 160 அடி உயரத்தில் உருவாகியிருக்கும் எடப்பாடியின் சிற்பத்திற்கு அருகில் தான் வெற்றிநடை போடும் தமிழகமே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. கூடவே எடப்பாடியார் 2021 என்ற எழுத்துருவும் இருக்கிறது. தற்போது இந்த மணற்சிற்பம் வைரலாகிவருகிறது.