×

சபரீசன், நக்கீரனுக்கு எதிரான மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே நடுங்க செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில்
 

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே நடுங்க செய்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகரான பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பொள்ளாச்சி வழக்கில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது.ஆனால் இதை பொள்ளாச்சி ஜெயராமன் மறுத்தார்.

அத்துடன் பொள்ளாச்சி விவகாரத்தில் தனது பெயரை பயன்படுத்தியதாக மு.க.ஸ்டாலின், நக்கீரன், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்ததுடன் மானநஷ்ட வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் ஸ்டாலின் தன்னை பற்றி பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்கவும் உத்தரவிட்டகோரி மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் சபரீசன், நக்கீரனுக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.