×

மருமகனுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்டை அள்ளிக்கொடுக்கும் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். 2016 தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘நமக்கு நாமே’ நடைப்பயணம் தொடங்கி சட்டமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் சபரீசனுக்கு பங்கு உண்டு. வெளியுலகிற்கு முகத்தை காட்டவில்லை என்றாலும், கட்சிக்குள் பல வியூகங்களை வகுத்து கொடுத்தவர் சபரீசன். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன்தான் தயாரித்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும்போது எல்லாம் சபரீசனை, ஸ்டாலின்
 

மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். 2016 தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘நமக்கு நாமே’ நடைப்பயணம் தொடங்கி சட்டமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் சபரீசனுக்கு பங்கு உண்டு. வெளியுலகிற்கு முகத்தை காட்டவில்லை என்றாலும், கட்சிக்குள் பல வியூகங்களை வகுத்து கொடுத்தவர் சபரீசன். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன்தான் தயாரித்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும்போது எல்லாம் சபரீசனை, ஸ்டாலின் உடன் அழைத்து செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப யுக்திகளில் அவ்வளவாக அனுபவமில்லாத ஸ்டாலினுக்கு பல யுத்திக்களை சொல்லிக்கொடுத்தவரும் சபரீசன்தான். திமுகவிற்கு ஐடி விங் உருவாக்கியது, அதனை நிர்வகித்து வந்தது என ஏராளமான வேலைகளை செய்துவந்துள்ளார். பிரசாந்த் கிஷோரை திமுகவுடன் கோர்த்துவிட்டதே சபரீசன் தான் என சொல்லப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் நடக்கும் வாய்ப்புள்ள நிலையில், தற்போது 3 தமிழ்நாடு எம்பிக்கள் இடம் காலியாக உள்ளது. திமுக சார்பாக எம்பி பதவியை பெற 300 முக்கியமான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபரீசன் செய்த உதவிக்கு கைமாறு செய்யும் விதமாக அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க திட்டமிட்டுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.