×

பா.ஜ.க.வில் சேருவாரா டிஸ்கோ டான்ஸர்… மிதுன் சக்கரவர்த்தியை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார். இதனையடுத்து மிதுன் பா.ஜ.க.வில் இணைய போவதாக யூகங்கள் பரவி வருகிறது. மேற்கு வங்கத்தில் எப்படியேனும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் உறுதியாக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களை தாமரை கட்சி தன்பக்கம் இழுத்து வருகிறது. அண்மையில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க.வில் இணையபோவதாக செய்தி
 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார். இதனையடுத்து மிதுன் பா.ஜ.க.வில் இணைய போவதாக யூகங்கள் பரவி வருகிறது.

மேற்கு வங்கத்தில் எப்படியேனும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் உறுதியாக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களை தாமரை கட்சி தன்பக்கம் இழுத்து வருகிறது. அண்மையில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க.வில் இணையபோவதாக செய்தி வெளியானது. ஆனால் அப்படி ஏதுவும் நடக்கவில்லை.

பா.ஜ.க.

மிதுன் சக்கரவர்த்தி முதலில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்பு திரிணாமுல் காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். ஆனால் உடல் நலத்தை காரணம் காட்டி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேற்கு வங்கத்தில் மிதுன் சக்கரவர்த்திக்கு செல்வாக்கு இருப்பதால் அவரை பா.ஜ.க. தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று மும்பையில் உள்ள மிதுன் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்றார். மிதுன் சக்கரவர்த்தியுடன் சிறிது நேரம் உரையாடி விட்டு அவர் சென்று விட்டார்.

மோகன் பகவத், மிதுன் சக்கரவர்த்தி

இதனையடுத்து மிதுன் சக்கரவர்த்தி விரைவில் பா.ஜ.க.வில் இணைவார் என்று வதந்தி மீண்டும் காட்டு தீயாக பரவியது. ஆனால் மிதுன் சக்கரவர்த்தியோ அந்த சந்திப்பு ஆன்மீக சந்திப்பு. மும்பைக்கு வந்தால் என் வீட்டுக்கு வரும் மோகன் பகவத்திடம் கூறியிருந்தேன். அதனால்தான் தற்போது அவர் என் வீட்டுக்கு வந்தார் என்று தெரிவித்தார். இருப்பினும், பா.ஜ.க.வின் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தை ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்வதாக அறியப்படுகிறது. எனவே மிதுன் சக்கரவர்த்தியை மோகன் பகவத் சந்தித்ததில் விஷயம் இல்லாமல் இருக்காது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.