×

வதோதரா நகராட்சி தேர்தல்… கங்கனா ரனாவத்தை பயன்படுத்தும் ராம்தாஸ் அதவாலே கட்சியினர்

குஜராத்தில் வதோதரா நகராட்சி தேர்தலுக்கு முன்பாக, தங்களது கட்சி தலைவர் ராம்தாஸ் அதவாலே, நடிகை கங்கனா ரனாவத்தை சந்தித்த புகைப்படத்தை போஸ்டர்களில் பயன்படுத்தி இந்திய குடியரசு மக்கள் கட்சியினர் ஆதரவு திரட்ட தொடங்கி விட்டனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆளும் கட்சியான சிவ சேனாவுக்கும், கங்கனா ரனாவத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான
 

குஜராத்தில் வதோதரா நகராட்சி தேர்தலுக்கு முன்பாக, தங்களது கட்சி தலைவர் ராம்தாஸ் அதவாலே, நடிகை கங்கனா ரனாவத்தை சந்தித்த புகைப்படத்தை போஸ்டர்களில் பயன்படுத்தி இந்திய குடியரசு மக்கள் கட்சியினர் ஆதரவு திரட்ட தொடங்கி விட்டனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆளும் கட்சியான சிவ சேனாவுக்கும், கங்கனா ரனாவத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான மும்பையில் அலுவலகத்தின் ஒரு பகுதியை விதிமுறைக்கு புறம்பான கட்டப்பட்டுள்ளது என மும்பை மாநகாராட்சி இடித்தது. ஆனாலும் கங்கனா ரனாவத் கொஞ்சம் கூட அசராமல் சிவ சேனாவை வெளுத்து வாங்கினார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரானவத்

யாரும் கங்கனா ரனாவத்துக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அதவாலே கங்கனா ரனாவத்துக்கு ஆதரவு அளித்தார். மேலும் அவர் மும்பையில் இருக்கும்போது தனது கட்சியினர் பாதுகாப்பு அளிப்பர் என தெரிவித்தார். மேலும் கங்கனா ரனாவத்தை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தற்போது கங்கனா ரனாவத்தின் புகழை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி தொடங்கியுள்ளனர் இந்திய குடியரசு கட்சியினர்.

ராம்தாஸ் அதவாலே

குஜராத் மாநிலம் வதோதரா நகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னதாக மக்களிடம் ஆதரவு திரட்டும் நோக்கில் காலா கோடா பகுதியில், கட்சி தலைவர் ராம்தாஸ் அதாவலே, கங்கனா ரனாவத்தை சந்தித்த புகைப்படத்தை போஸ்டரில் போட்டு நகரம் முழுவதும் ஒட்டி தற்போதே நகராட்சி தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். இது குறித்து அந்த கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் கோயல் கூறுகையில், மும்பையில் கங்கனா இருந்தபோது அவரை எங்க கட்சி தலைவர் ஆதரித்தார். நாங்கள் அவரை (கங்கனா) ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்விதமாக இது போன்ற போஸ்டர்களை மாநிலம் முழுவதும் ஒட்ட உள்ளோம். எதிர்வரும் வதோதரா நகராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.