×

ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி செய்த புரட்சி

1994 ஆம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைத்தார்.அதற்கு முன்பு, அக்டோபர் எட்டாம் நாள் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா,ஆளுநர் சென்னா ரெட்டிக்கு ஆவணங்களை அனுப்பி இருந்தார்.ஆனால் ஆளுநர் ஒரு மாதமாக முடிவு எடுக்கவில்லை.எனவே ஜெயலலிதா துணிந்து மேற்கண்ட அறிவிப்பைச் செய்தார்.அதற்கு அரசு ஆணை பிறப்பித்தார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்போதைய தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் ஒரு
 

1994 ஆம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைத்தார்.அதற்கு முன்பு, அக்டோபர் எட்டாம் நாள் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா,ஆளுநர் சென்னா ரெட்டிக்கு ஆவணங்களை அனுப்பி இருந்தார்.ஆனால் ஆளுநர் ஒரு மாதமாக முடிவு எடுக்கவில்லை.எனவே ஜெயலலிதா துணிந்து மேற்கண்ட அறிவிப்பைச் செய்தார்.அதற்கு அரசு ஆணை பிறப்பித்தார்.


பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்போதைய தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் ஒரு ஆவணம் தாக்கல் செய்தார்.இவ்வாறு அரசு ஆணை வெளியிடுவதற்கு விதிகளில் இடம் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தார்(வணிகச் சட்டம் 5).அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்,19 95 பிப்ரவரி மாதம் பிறப்பித்த ஆணையில்,முதல்வர்ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பு அளித்தது.அந்தத் தீர்ப்பை ஆளுநர் சென்னாரெட்டி ஏற்றுக்கொண்டார்.


இரண்டாவது முறையாக,அதே தலைமைச் செயலாளர் ஹபாஸ்கருக்கு பதவி நீட்டிப்பு பிரச்சனை எழுந்தது.1994 நவம்பர் 30 அவர் ஓய்வு பெறவேண்டும்.அவருக்கு நீட்டிப்புக் கேட்டு அக்டோபர் 24 அன்று ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.அதை ஆளுநர் ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார்.நவம்பர் 24 ஆம் நாள் ஜெயலலிதா ஹரிபாஸ்கர் பதவியை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.இதுவும் சென்னை

உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது.1995 டிசம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொண்டது.
மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளின் அடிப்படையில்தான்,இப்போது எடப்பாடி,
மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடங்களை ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்தார்.மறுநாள் அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.இது ஒரு புரட்சி.