×

மக்கள் எதிர்பார்ப்பை துணை முதல்வர் அறிவிப்பு பூர்த்தி செய்துள்ளது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை இரண்டாக பிளக்கும் அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்த இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும்
 

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை இரண்டாக பிளக்கும் அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்த இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள். முதல்வர் எடப்பாடி அவர்கள் தலைமையில் மீண்டும் அம்மாவின் அரசு அமைய வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பை துணை முதல்வர் அறிவிப்பு பூர்த்தி செய்துள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவின் செயல்பாடுகளை பொறுத்து இருந்து பாருங்கள்” என தெரிவித்தார்.