×

ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நான் வழங்குறேன்! ஸ்டாலினுக்கு ராமதாஸ் உறுதி!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமாஸை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். அப்போது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படி மருத்துவர் ராமதாஸிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்
 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமாஸை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படி மருத்துவர் ராமதாஸிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த மருத்துவர் ராமதாஸ், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.