×

யார் அந்த தலைவர்..? கருணாநிதி சொன்னதாக சர்ச்சையைக் கிளப்பிய ராமதாஸ்!

அந்த பெரிய தலைவரை நம்ப வேண்டாம் என்று கருணாநிதி தன்னிடம் கூறியதாக புதிய சர்ச்சை ஒன்றை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடக்கிவைத்துள்ளார். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே
 

அந்த பெரிய தலைவரை நம்ப வேண்டாம் என்று கருணாநிதி தன்னிடம் கூறியதாக புதிய சர்ச்சை ஒன்றை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடக்கிவைத்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.