×

“ஜனவரியில் கட்சித் துவக்கம்” மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் : ரஜினிகாந்த் பரபரப்பு ட்வீட்!

ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும்! ஜனவரி மாதம் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்து வந்த
 

ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும்! ஜனவரி மாதம் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாதம் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ஆனால், தனது உடல்நிலை காரணமாக தற்போதைக்கு கட்சி தொடங்கவில்லை என்றும் அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் ரஜினி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் சாதகம், பாதகங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி, அரசியல் பிரவேசம் குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது புரியாத புதிராகவே இருந்து வந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு அரசியலில் களமிறங்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.