×

முதலமைச்சர் முன்னலையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

புதிய கட்சி தொடங்கப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த நவம்பர் மாதம் அதனை உறுதிப்படுத்தினார். அதற்கான பணிகளையும் மும்முரமாக தொடங்கினார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கிற்கு சென்று வந்த ரஜினிகாந்த், உடல்நிலை காரணத்தால் அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். அதற்கு மக்களிடம் மன்னிப்பும் கோரினார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று காத்துக் கிடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு
 

புதிய கட்சி தொடங்கப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த நவம்பர் மாதம் அதனை உறுதிப்படுத்தினார். அதற்கான பணிகளையும் மும்முரமாக தொடங்கினார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கிற்கு சென்று வந்த ரஜினிகாந்த், உடல்நிலை காரணத்தால் அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். அதற்கு மக்களிடம் மன்னிப்பும் கோரினார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று காத்துக் கிடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இதனால் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்கள், மாற்று கட்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர். இன்று மதியம் திமுகவில் சிலர் இணைந்தனர்.

இந்நிலையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பாக சென்னை அசோக் நகரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.நகர் பகுதியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்