×

கவர்னரின் நடத்தை குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்குமாறு விடுத்த கோரிக்கையை அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா விளக்கம் கேட்டு தட்டி கழித்து விட்டார். இந்த சூழ்நிலையில் மாநில கவர்னரின் நடத்தை குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பேர்மவுண்ட் ஹோட்டலிருந்து முதல்வர் அசோக் கெலாட் வெளியே செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமருடன் பேசினேன், கவர்னரின்
 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்குமாறு விடுத்த கோரிக்கையை அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா விளக்கம் கேட்டு தட்டி கழித்து விட்டார். இந்த சூழ்நிலையில் மாநில கவர்னரின் நடத்தை குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பேர்மவுண்ட் ஹோட்டலிருந்து முதல்வர் அசோக் கெலாட் வெளியே செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமருடன் பேசினேன், கவர்னரின் நடத்தை குறித்து அவரிடம் தெரிவித்தேன். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக அவரிடம் பேசினேன் என தெரிவித்தார்.


மேலும், குடியரசு தலைவருக்கு மனு அளிக்க உள்ளதாகவும், ராஜஸ்தான் மாநில உள்விவகாரங்கள் குறித்து அவரிடம் தெரிவிக்க உள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்தார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு ஆட்டம் கண்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சி தாவி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரும் கடந்த 2 வாரங்களாக பேர்மவுண்ட் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.