×

மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை குறைக்க அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். தற்போது மகாராஷ்டிராவில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாக ராஜ் தாக்கரே தகவல் தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரே நேற்று காலையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது தொடர்பாக மகாராஷ்டிரா
 

மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை குறைக்க அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். தற்போது மகாராஷ்டிராவில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாக ராஜ் தாக்கரே தகவல் தெரிவித்துள்ளார்.

ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரே நேற்று காலையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது தொடர்பாக மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். கவர்னருடான சந்திப்பு முடிந்த பிறகு ராஜ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அதானி மற்றும் பிரஹன்மும்பை எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட் அதிகாரிகளை எனது பிரதிநிதிக்குழு சந்தித்தது. ஆகையால் மின் கட்டணம் உயர்வு தொடர்பாக கவர்னரை நான் சந்தித்தேன்.

கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி

மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன. கவர்னர் இந்த தகவலை முதல்வருக்கு தெரிவிப்பார். அதன் பிறகு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும். மகாராஷ்டிராவில் பல பிரச்சினைகள் உள்ளன. கேள்விகளுக்கு பஞ்சமில்லை. ஒருவர் அரசாங்கத்திடமிருந்து பதில்களை பெற வேண்டும். நான் சரத் பவாரை சந்திப்பேன். தேவைப்பட்டால் சரியான நேரம் வரும்போது முதல்வரை (உத்தவ் தாக்கரே) சந்திப்பேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.