×

கமல் ஹாசனுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு திரையுலக கலைஞர்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கமல் பல சாதனைகளை புரிந்துள்ளார். இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் , வசன கர்த்தா என பன்முகங்களை கொண்ட கமல், தற்போது அரசியல் களம் கண்டுள்ளார். இந்நிலையில் கமல்
 

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு திரையுலக கலைஞர்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கமல் பல சாதனைகளை புரிந்துள்ளார். இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் , வசன கர்த்தா என பன்முகங்களை கொண்ட கமல், தற்போது அரசியல் களம் கண்டுள்ளார்.

இந்நிலையில் கமல் ஹாசன் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “நவீன தமிழ் கலாச்சாரத்திற்கு பங்களித்த வலுவான குரல் கொண்ட கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.