×

உங்கள் உதடுகள் பேச இலவசம்… உண்மை உயிருடன் இருக்கிறது என்று சொல்லுங்கள்.. ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறுகளுக்கு எதிராக தைரியமாக பேசுங்கள் என்பதை வலியுறுத்தி, உங்கள் உதடுகள் பேச இலவசம், உண்மை உயிருடன் இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலரும், மாணவியுமான திஷா ரவியை வன்முறையை தூண்டியதாக போலீசார் கைது செய்தது, மத்திய அரசை விமர்சிக்கும் டிவிட்டர் கணக்குகளை முடக்கவில்லையென்றால், அதன் பணியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற மிரட்டல், யூ டியுப்பர் செய்தியாளர்களை மிரட்டியதாக வெளிவந்த செய்திகளை ராகுல் காந்தி தனது
 

மத்திய அரசின் தவறுகளுக்கு எதிராக தைரியமாக பேசுங்கள் என்பதை வலியுறுத்தி, உங்கள் உதடுகள் பேச இலவசம், உண்மை உயிருடன் இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலரும், மாணவியுமான திஷா ரவியை வன்முறையை தூண்டியதாக போலீசார் கைது செய்தது, மத்திய அரசை விமர்சிக்கும் டிவிட்டர் கணக்குகளை முடக்கவில்லையென்றால், அதன் பணியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற மிரட்டல், யூ டியுப்பர் செய்தியாளர்களை மிரட்டியதாக வெளிவந்த செய்திகளை ராகுல் காந்தி தனது டிவிட்டரில் தனது பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

கிரெட்டா தன்பர்க்,திஷா ரவி

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், உங்கள் உதடுகள் பேச இலவசம், உண்மை இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொல்லுங்கள். அவர்கள் ( பா.ஜ..க) பயப்படுகிறார்கள், நாடு அல்ல. இந்தியா அமைதியாக இருக்காது என்று பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தி முன்னதாக ஒரு டிவிட்டரில், சமையல் கியாஸ் விலை உயர்வு தொடர்பான செய்தியை பதிவிட்டு, இருவரின் வளர்ச்சிக்காக பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது என்று பதிவு செய்து இருந்தார்.

திஷா ரவி

டெல்லியின் எல்லைகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை (டூல்கிட்), பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி (வயது 22), சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். சூழலியல் ஆர்வலரான அவர், ஒரு போராட்டக்குழு சார்பில் இதனை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் பெங்களூரு வந்த டெல்லி போலீசார், திஷா ரவியை கைது செய்தனர். வன்முறையை தூண்டிவிடுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டன் தெரிவத்தன.