×

ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோரின் போன்களும் ஹேக் – விஸ்வரூபமாகும் “பெகாசஸ்” லீலைகள்!

இஸ்ரேலின் பெகாசஸ் (Pegasus) ஸ்பைவேர் சாப்ட்வேர் மிகவும் அபாயகரமானது. பிரபலமான ஆட்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைந்து உளவு பார்க்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடக் கூடிய திறன் கொண்டது. இந்த மென்பொருளானது ஒருவரின் போனுக்குள் நுழைந்து அவர்களின் போட்டோ, வீடியோ, ஆவணங்கள் அடங்கிய PDF
 

இஸ்ரேலின் பெகாசஸ் (Pegasus) ஸ்பைவேர் சாப்ட்வேர் மிகவும் அபாயகரமானது. பிரபலமான ஆட்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைந்து உளவு பார்க்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடக் கூடிய திறன் கொண்டது.

இந்த மென்பொருளானது ஒருவரின் போனுக்குள் நுழைந்து அவர்களின் போட்டோ, வீடியோ, ஆவணங்கள் அடங்கிய PDF என ஒவ்வொன்றையும் அவருக்கே தெரியாமல் உருவக் கூடியது. அவரின் போனில் மைக்ரோபோனை ஆக்டிவேட் செய்து அவர் யாரிடம் என்ன பேசுகிறார் என்பதையும் ஒட்டு கேட்க முடியும். இதனை ஆரம்பத்தில் அரசுகள் மட்டுமே உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தும் என்ற சொல்லப்பட்ட நிலையில், தனிப்பட்ட பிரபல நபர்கள் கூட இந்தச் செயலியைப் பயன்படுத்தி உளவு பார்த்துவந்த தகவல் வெளியாகி அதிரவைத்தது.

தற்போது இந்த சாப்ட்வேரால் தான் இந்திய அரசியல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உரிமைப் போராளிகள், அரசு மீது அதிருப்தியில் உள்ளவர்கள் என பல்வேறு பிரபலங்களின் போன்களும் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதேபோல அவர்களின் போன் கால்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் தரவுகள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்படுத்தியுள்ளது.


இந்நிறுவனத்துக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள் தான் வாடிக்கையாளர்கள் என்று சொல்லப்படுவதால், மத்திய அரசின் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் மத்திய அரசு தங்களுக்கு எதுவும் தெரியாது என திட்டவட்டமாக மறுக்கிறது. இச்சூழலில் தற்போது மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளிவந்துள்ளது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் இரண்டு போன்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய போன்கள் மட்டுமல்லாமல் அவரின் நெருங்கிய நண்பர்கள், அவருடைய உதவியாளர்களின் போன்களும் ஹேக் லிஸ்டில் இருக்கின்றன. அதேபோல இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவரான தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோரின் போனையும் விட்டுவைக்கவில்லை. பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் போனும் டார்க்கெட்டாகியிருக்கிறது. இவ்வளவு ஏன் மத்திய அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதில் அஸ்வினி வைஷ்ணவ் புதிதாக பதவியேற்ற தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் என்பது தான் ஹைலைட்.