×

புதுச்சேரியில் அமித் ஷாவின் ஆட்டம் ஆரம்பம்… ராஜினாமா கடிதம் அனுப்பிய சபாநாயகர்!

புதுச்சேரியில் கால்தடம் பதிக்க பாஜக அரசியல் சித்து விளையாட்டுக்களைக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைய தயக்கம் காட்டிவந்த நிலையில், அதிருப்தி அமைச்சராக இருந்த நமச்சிவாயத்தை வலையில் வீழ்த்தியது. பெரிய தலைகட்டை இழுத்தால் அதற்குக் கீழ் உள்ளவர்கள் தயங்காமல் இணைவார்கள் என்பது பாஜகவின் பிளான். அதைப் போலவே புதுச்சேரியின் அரசியல் நகர்வு இருந்தது. இதன் நடுவே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் திமுகவில் ஒருவரும் ராஜினாமா செய்தனர். இதனால்
 

புதுச்சேரியில் கால்தடம் பதிக்க பாஜக அரசியல் சித்து விளையாட்டுக்களைக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைய தயக்கம் காட்டிவந்த நிலையில், அதிருப்தி அமைச்சராக இருந்த நமச்சிவாயத்தை வலையில் வீழ்த்தியது. பெரிய தலைகட்டை இழுத்தால் அதற்குக் கீழ் உள்ளவர்கள் தயங்காமல் இணைவார்கள் என்பது பாஜகவின் பிளான். அதைப் போலவே புதுச்சேரியின் அரசியல் நகர்வு இருந்தது.

இதன் நடுவே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் திமுகவில் ஒருவரும் ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி அரசு பலமிழந்தது. உடனே துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நாராயணசாமி தலைமையில் அனைவரும் வெளியேறினார். இதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து புதுச்சேரி அரசு கவிழ்ந்ததாக அறிவித்தார். நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த பிறகு எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.

இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு நடுவே புதிய சர்ச்சையை நாராயணசாமி கிளப்பினார். அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே சபாநாயகர் அரசு கவிழ்ந்ததாக அறிவித்தார். இதுகுறித்த சட்ட ஆலோசனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இச்சூழலில் தற்போது சபாநாயகர் சிவக்கொழுந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா முன்னிலையில் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். விரைவில் சிவக்கொழுந்துவும் இணைவார் என்று கூறப்படுகிறது.