×

உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போட்ட ஒப்பந்தங்களில் முடிக்கப்பட்ட திட்டங்கள்- பல ஆயிரம் வேலை வாய்ப்புகள்! பட்டியலிட்ட முதல்வர் பழனிச்சாமி

காஞ்சிபுரத்தில் நடந்த புதிய கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி பேசியபோது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக பல தொழிற்சாலைகள் உருவாகி, பல ஆயிரம் பேருக்கு கிடைத்திருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-10ஆம் தேதிகளில் உலக முதலீட்டார்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி
 

காஞ்சிபுரத்தில் நடந்த புதிய கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி பேசியபோது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக பல தொழிற்சாலைகள் உருவாகி, பல ஆயிரம் பேருக்கு கிடைத்திருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-10ஆம் தேதிகளில் உலக முதலீட்டார்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர்,


இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019ம் துவங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி துவக்கிவைத்தார். இந்த மாநாடுகளின் மூலமாக பல தொழிற்சாலைகளும், பல ஆயிரம்பேருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைத்திருப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது:

’’1. ஹூண்டாங் மோட்டார்ஸ் கார் உற்பத்தி திட்டம்

  1. பாஸ்கான் நிறுவனத்தின் கைபேசி உற்பத்தி திட்டம்
  2. சால்பான் கைபேசி உதிறிபாகங்கள் திட்டம்
    இவை முடிக்கப்பட்ட முக்கியமான திட்டங்கள். இவை தவிர ஜியர் டயர் உற்பத்தி நிறுவனத்தின் திட்டம் முடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வ ழங்கபடுகிறது. நானே போய் நேரில் திறந்துவைத்துவிட்டு வந்தேன்.

2019 முலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில், 41 ஆயிரத்து 510 கோடி முதலீட்டை ஈர்க்கப்பட்டு, 93 ஆயிரத்து 210 பேர்களுக்கு கோடி வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டன. இவற்றில், 18 திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு, வணிக உற்பத்தி தொடங்கியுள்ளன.
இதன் மூலம் 13 ஆயிரத்து 564 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப்பட்டு, 38 ஆயிரத்து 244 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்த அரசு அம்மாவின் அரசு.

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவற்றில் டாடா கன்சல்டன்ஸியில் 24 கோடியில் மென்மொருள் திட்டம் தொடங்கி, 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

1500 கோடி முதலீட்டு 23 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், ரேடியல் ஐடி பார்க் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

605 கோடி மதிப்பீட்டில் 4,144 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் மூன்று திட்டங்கள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது கடந்த 2005ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். அப்போது காஞ்சிபுரம் – செங்கல்பட்டு இரண்டும் ஒரே மாவட்டமாக இருந்தது. இன்றைக்கு இந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 14 புரிந்துணவு ஒப்பங்கள். 7,132 கோடி மதிப்பீடில்13, 851 நபர்களூக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் கைஎ இவற்றில்10 திட்டங்கள் தொடங்கப்பட்டு உற்பத்தியும் தொடங்கப்படுள்ளன.