×

உ.பி.யில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணம் குறைவான பரிசோதனைதான்.. பிரியங்கா காந்தி பகீர் குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு குறைவான பரிசோதனைகள், போலி புள்ளிவிவரங்கள்தான் காரணம் என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், கிட்டத்தட்ட 3 மாத லாக்டவுன், உத்தர பிரதேச அரசின் அனைத்து உரிமை கோரல்கள் இருந்தாலும் ஜூலை மாதத்தில் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 3 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மாவட்டங்களில் 200
 

உத்தர பிரதேசத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு குறைவான பரிசோதனைகள், போலி புள்ளிவிவரங்கள்தான் காரணம் என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், கிட்டத்தட்ட 3 மாத லாக்டவுன், உத்தர பிரதேச அரசின் அனைத்து உரிமை கோரல்கள் இருந்தாலும் ஜூலை மாதத்தில் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

3 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மாவட்டங்களில் 200 சதவீதமும், 3 மாவட்டங்களில் 400 சதவீதமும், ஒரு மாவட்டத்தில் 1000 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பிரயக்ராஜில், கொரோனா வைரஸ் இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வந்தவர்களில் 70 சதவீதம் பேர் 48 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இது தொடர்பாக (கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு) நாம் ஏற்கனவே பயந்தோம். அதனால்தான் ஆரம்பத்தில் உத்தர பிரதேச முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்த சூழலில் சாதகமான ஆலோசனைகளை வழங்கினோம் அதிகபட்ச பரிசோதனை விஷயத்தை வலியுறுத்தி இருந்தோம்.

பரிசோதனை குறைவு, ரிப்போர்ட் செய்வதில் தாமதம், தரவு மோசடி மற்றும் தொடர்புகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தாதது போன்றவற்றால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு உத்தர பிரதேச அரசிடம் பதில் இல்லை என பதிவு செய்து இருந்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,163ஆக உயர்ந்துள்ளது.