×

முருகனை ஆதரித்து பேச தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி

சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தாராபுரத்தில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக மற்றும் அதிமுக கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20- தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் அக்கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பளாராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா மற்றும்
 

சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தாராபுரத்தில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக மற்றும் அதிமுக கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20- தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் அக்கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பளாராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா மற்றும் அண்ணாமலை ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இருப்பினும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா , மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜெ.பி.நட்டா ஆகியோர் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வருவார்கள் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச தாராபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் . அதிமுக – பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும் இக்கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் பங்கேற்றுள்ளனர். தமிழக அமைச்சர்கள் .கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் மோடியின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக டெல்லியில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு சென்று அங்கு பரப்புரை செய்தார் என்பது குறிபிடத்தக்கது.