"விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்
எந்த ஒரு அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது. சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தேமுதிகவை தவிர விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்த கூடாது.
தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அரசின் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் பணத்தில் செயல்படும் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைக்க கூடாது. திமுகவின் ஆட்சியில் நிறை, குறைகள் நிறைந்துள்ளது. ஜனவரி 9ல் நடக்க உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது” என்றார்.