×

‘சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு’ : அந்தர் பல்டி அடித்த பிரேமலதா

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தனது ஆதரவு இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகளுக்கிடையே தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. அதிமுகவுடன் பாஜக மட்டுமே கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. பிற கட்சிகள் இன்னும் மௌனம் காக்கின்றன. அதில் தேமுதிகவும் ஒன்று. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, கணிசமாக வெற்றியைக் கண்டது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் சட்டப்பேரவையில் அமர்ந்தார். இதனால் வரும்
 

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தனது ஆதரவு இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகளுக்கிடையே தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. அதிமுகவுடன் பாஜக மட்டுமே கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. பிற கட்சிகள் இன்னும் மௌனம் காக்கின்றன. அதில் தேமுதிகவும் ஒன்று. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, கணிசமாக வெற்றியைக் கண்டது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் சட்டப்பேரவையில் அமர்ந்தார்.

இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவிடம் இருந்து 41 தொகுதிகளை தேமுதிக ஒதுக்கீடு செய்ய கோரியிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அதிக இடங்கள் தரவில்லை என்றால் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்காது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கு எதிராக இருக்கும் சசிகலாவுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார் பிரேமலதா. இப்போது வரையில் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறிய அவர், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. சசிகலா அரசியலுக்கு வரவேண்டும். அது தவறில்லை என்பது என்னுடைய கருத்து என்று அதிரடியாக கூறியிருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வர் ஆகவில்லை; அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தெரிவித்த அவர், தேர்தலுக்கு நேரம் குறைவாக இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி இருக்கும் சூழலில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பிரேமலதா இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – தேமுதி கூட்டணி சிதற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.