×

பிரஷாந்த் கிஷோர் கேட்ட ‘அந்த பதவி’..கலக்கத்தில் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய செய்தி வெளியானதில் இருந்து அடிக்கடி கேட்கும் பெயர் பிரஷாந்த் கிஷோர். இந்திய அரசியல் களத்தில் முக்கியமான நபர் இவர். ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் ஆட்சியை பிடிக்க பெரும்பங்காற்றியவர். பீகார் முதல்வருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இவர், தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தமிழக சட்டமன்றத்
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய செய்தி வெளியானதில் இருந்து அடிக்கடி கேட்கும் பெயர் பிரஷாந்த் கிஷோர். இந்திய அரசியல் களத்தில் முக்கியமான நபர் இவர். ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் ஆட்சியை பிடிக்க பெரும்பங்காற்றியவர். பீகார் முதல்வருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இவர், தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற துடிக்கும் திமுகவுடன் ஐபேக் நிறுவனம் கைகோர்த்துள்ளது. எல்லா தொகுதிகளிலும் சர்வே எடுத்து வியூகங்களை வகுத்திருக்கும் பிரஷாந்த் கிஷோர், நீங்கள் தான் அடுத்த முதல்வர் என ஸ்டாலினிடம் அடித்துச் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், ஐபேக் உதவியுடன் திமுக அரியணை ஏறிவிட்டால் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை எனக்கு தான் கொடுக்க வேண்டுமென பிரஷாந்த் கிஷோர் ஸ்டாலினிடம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருக்கும் பதவியே ‘டெல்லி சிறப்பு பிரதிநிதி’. தமிழக அரசின் அரசு சம்பந்தப்பட்ட முக்கிய கோப்புகளை பார்க்கும் அதிகாரம் இந்த பதவிக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பதவியை பிரஷாந்த் கிஷோர் கேட்பது மு.க ஸ்டாலினை கலக்கமடையச் செய்துள்ளதாம். இதற்கு மறுப்பு தெரிவித்த திமுக வட்டாரம், வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு எப்படி அந்த பதவியை ஸ்டாலின் கொடுப்பார்? என கேள்வி எழுப்பியதாம். தற்போது அந்த பதவியை வகிப்பவர் தளவாய் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.