×

காங்கிரஸ் விவசாயிகளை தூண்டியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்…. பா.ஜ.க. வலியுறுத்தல்

குடியரசு தினத்தன்று விவசாயிகளை காங்கிரஸ் தூண்டியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகளின் எதிர்ப்பு முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அந்த கட்சிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜனவரி 26ம் தேதியன்று விவசாயிகளை
 

குடியரசு தினத்தன்று விவசாயிகளை காங்கிரஸ் தூண்டியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகளின் எதிர்ப்பு முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அந்த கட்சிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜனவரி 26ம் தேதியன்று விவசாயிகளை தூண்டியது.

பிரகாஷ் ஜவடேகர்

இதற்கு பொறுப்பேற்காமல் அவர்களால் தப்பி ஒட முடியாது. ஏனென்றால் பஞ்சாபில் அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள். காங்கிரசின் இத்தகைய அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம். மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொண்டபோதும், பல மாநிலங்களில் எதிர்ப்புகள் இல்லை. காங்கரசின் தூண்டி விடும் அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம். காலையிலிருந்து கும்பலை தூண்டியது யார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஒரு டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்கியபோது அவர்கள் போலீசாருடன் எட்டிய ஒப்பந்தத்தை மீறியது யார்?

காங்கிரஸ்

காங்கிரசும், ராகுல் காந்தியும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் இந்த எதிர்மறை அரசியல் நாட்டுக்கு பயனுள்ளதாக இல்லை. வேளாண் சட்டங்கள் விவசாயிக்கு ஒரு தோ்வை கொடுக்கும் முயற்சியாகும். இந்த காங்கிரசும் இதனை புரிந்து கொண்டுள்ளது. ஆனால் சமரசம் நடக்க அது விரும்பவில்லை. ஒரு வகையில், தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சி செய்கின்றன என்று தெரிகிறது. ராகுல் காந்தி தொடர்ந்து ஆதரவளிப்பது மட்டுமல்லாமல் (ஆர்ப்பாட்டங்கள்) தூண்டினார். இது சி.ஏ.ஏ.ன் போதும் நடந்தது. காங்கிரஸ் பேரணிகளை நடத்துகிறது. மறுநாள் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தின்போதும் அது நடந்தது. அவர்கள் (காங்கிரஸ்) விவசாயிகளை தூண்டினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.