×

தவறான தகவல்கள் அளித்த டெல்லி, மேற்கு வங்கத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்.. பிரகாஷ் ஜவடேகர் தகவல்

அனாதை குழந்தைகள் குறித்து தகவல்களை அளித்த டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் விகே பாட்டீல் அறக்கட்டளை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்து வைத்தார். பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலையை திறந்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆலையில் நிமிடத்துக்கு 500 லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன்
 

அனாதை குழந்தைகள் குறித்து தகவல்களை அளித்த டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் விகே பாட்டீல் அறக்கட்டளை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்து வைத்தார். பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலையை திறந்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆலையில் நிமிடத்துக்கு 500 லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது ஒரு நல்ல தொடக்கமாகும். இது இந்த மருத்துவமனை ஆக்சிஜனில் சுயசார்பாக மாற்றும். அதற்கு வாழ்த்துக்கள்.

பி.எம்.கேர்ஸ்

கோவிட்-19 காலகட்டத்தில், சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பிறகும் பல மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சொந்த அமைப்பு இல்லை என்று தெளிவாக தெரிகிறது. இதற்காக நமது பிரதமரின் பிஎம்-கேர்ஸ் நாடு முழுவதுமாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 1,200 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க ஒப்புதல் அளித்தது. விகே பாட்டீல் அறக்கட்டளை போலவே, நாட்டின் பிற தனியார் மருத்துவமனைகளும் ஆக்சிஜன் சுயசார்பு பெற வேண்டும். இதனால் நாட்டில் இது போன்ற நெருக்கடி (தொற்றுநோய் பாதிப்பு) ஏற்பட்டால் எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது. கோவிட்-19 காரணமாக அனாதையான அல்லது பெற்றோர் இறந்த குழந்தைகளை பற்றிய தவறான தகவல்களை வழங்கியதற்காக டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகள் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டன. இந்த தகவல் (அனாதை குழந்தைகள்) பால் ஸ்வராஜ் வலைதளத்திலும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அனாதை குழந்தைகளின் மறுவாழ்வு பிரச்சினை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த திங்கட்கிழமை முதல் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, கோவிட்-19 காரணமாக அனாதையான குழந்தைகளின் தரவுகளை வழங்க டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகள் தயக்கம் காட்டி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து 2020 ஏப்ரல் முதல் கோவிட்-19 தொற்றுநோயின்போது அனாதைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த முழு தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும்படி டெல்லி, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.