×

ஸ்டாலின் அரசுக்கு உதவ முன்வந்த வைரமுத்து…எப்படி தெரியுமா?

கவிஞர் வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா வார்டாக மாற்றிக்கொள்ள வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரேநாளில் 26,465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 23ஆயிரத்து 965ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து
 

கவிஞர் வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா வார்டாக மாற்றிக்கொள்ள வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரேநாளில் 26,465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 23ஆயிரத்து 965ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்

“திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,

முதல் மண்டபமாக
எங்கள் ‘பொன்மணி மாளிகை’
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.

மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.