×

‘சென்னையில் 3 மணி நேரம் மட்டுமே’.. பிரதமர் மோடியின் பயண விவரம் இதோ!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் அரசான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அவ்வப்போது தமிழகம் வந்த வண்ணம் இருக்கின்றனர். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னைக்கு வந்திருந்தார். இதனிடையே, பிப்.14ம் தேதி தமிழக அரசின் திட்டப்பணிகளை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பிரச்சாரத்திற்காக மோடி வரும் அதே
 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் அரசான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அவ்வப்போது தமிழகம் வந்த வண்ணம் இருக்கின்றனர். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னைக்கு வந்திருந்தார். இதனிடையே, பிப்.14ம் தேதி தமிழக அரசின் திட்டப்பணிகளை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட பிரச்சாரத்திற்காக மோடி வரும் அதே நாளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வரவிருக்கிறார். மோடியின் வருகை திட்டங்களை தொடக்கி வைக்க மட்டுமே, அரசியல் ரீதியானது இல்லை என ஆளும் கட்சி தெரிவித்தாலும் அவரது பயணம் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கும் மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருக்கப்போவதாக பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, காலை 11:15 மணிக்கு நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறாராம். பின்னர், மூன்று மணி நேர சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் 01:35 மணிக்கு கொச்சி செல்கிறாராம்.