×

“இதை செய்தால் நிச்சயம் மத்திய அரசு வசமா சிக்கும்” – பெகாசஸ் லீலைகளுக்கு ப.சிதம்பரம் கொடுத்த ஐடியா!

இஸ்ரேலின் பெகாசஸ் (Pegasus) ஸ்பைவேர் சாப்ட்வேர் மிகவும் அபாயகரமானது. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடக் கூடிய திறன் கொண்டது. இந்த மென்பொருளானது ஒருவரின் போனுக்குள் நுழைந்து அவர்களின் போட்டோ, வீடியோ, ஆவணங்கள் என ஒவ்வொன்றையும் அவருக்கே தெரியாமல் உருவக் கூடியது. அவரின் போனில் மைக்ரோபோனை
 

இஸ்ரேலின் பெகாசஸ் (Pegasus) ஸ்பைவேர் சாப்ட்வேர் மிகவும் அபாயகரமானது. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடக் கூடிய திறன் கொண்டது.

இந்த மென்பொருளானது ஒருவரின் போனுக்குள் நுழைந்து அவர்களின் போட்டோ, வீடியோ, ஆவணங்கள் என ஒவ்வொன்றையும் அவருக்கே தெரியாமல் உருவக் கூடியது. அவரின் போனில் மைக்ரோபோனை ஆக்டிவேட் செய்து அவர் யாரிடம் என்ன பேசுகிறார் என்பதையும் ஒட்டு கேட்க முடியும். இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உரிமைப் போராளிகள், அரசு மீது அதிருப்தியில் உள்ளவர்கள் என பல்வேறு பிரபலங்களின் போன்களும் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதேபோல அவர்களின் போன் கால்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

இதனால் இந்தியாவில் தரவுகள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உரிமைப் போராளிகள், அரசு மீது அதிருப்தியில் உள்ளவர்கள் என பல்வேறு பிரபலங்களின் போன்களும் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதேபோல அவர்களின் போன் கால்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் தரவுகள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டக்குழு விசாரணைக்கு (Joint Parlimentary Committee) உத்தரவிட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு (Parlimentry Panel) விசாரணையைவிட கூட்டுக்குழு விசாரணை மிகவும் சக்திவாய்ந்தது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விதிகள் மிகவும் கண்டிப்பானவை. ஆதாரங்களை வெளிப்படையாக எடுக்க முடியாது. ஆனால், அதிகாரம் மிக்க கூட்டுக்குழு, பொதுவெளிக்கு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும், சாட்சிகளை விசாரிக்க முடியும், சம்மனும் அனுப்பலாம்.

பிரான்ஸ், இஸ்ரேல் அரசுகள் பெகாசஸ் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. ஆனால் இந்திய அரசு ஏன் இன்னும் விசாரணைக்கு உத்தரவிடவில்லை? இதற்குப் பொருள் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதா? இதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் அமித் ஷாவும் அஸ்வினி வைஷ்ணவ்வும் வார்த்தைகளைச் சாதுர்யமாக கையாளுகிறார்கள். அவர்கள் இருவரும் உளவு பார்த்து பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்டதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள். 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி உதவி இருக்கலாம்” என்றார்.