அதிமுகவுக்கு 170 , பாஜகவுக்கு 23 தொகுதிகள்? ஓபிஎஸ், தினகரனை இணைக்க ஈபிஎஸ் சம்மதம்
தொகுதி பங்கீடு விவரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு பட்டியல் தரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு விவரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு பட்டியல் தரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் கூட்டணியில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கான இடங்களை பாஜக ஒதுக்குகிறது. அதன்படி அதிமுகவுக்கு 170 தொகுதிகள், பாஜகவுக்கு 23 தொகுதிகள், பாமகவுக்கு 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், அமமுகவுக்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு தலா 3 தொகுதிகள் தரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎஸ் உடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பியூஷ் கோயல், “இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன. அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும், ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவது எப்படி என்படு தொடர்பாகவும் ஆலோசித்தோம். இந்த சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது” என்றார்.