×

மானியம் வழங்குவதற்கு பதிலாக கடன் வழங்குவது விவசாயிகளின் பிரச்சினைகளை மோசமாக்கும்.. பினராயி விஜயன்

விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு அதிக கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அவர்களின் கடனை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை மோசமாக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய பட்ஜெட் குறித்து கூறியதாவது:
 

விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு அதிக கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அவர்களின் கடனை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை மோசமாக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய பட்ஜெட் குறித்து கூறியதாவது: புதிய தாராளமய செயல்முறையை செயல்படுத்தபோவதாக பா.ஜ.க. கூட்டணி அரசாங்கத்தின் அறிவிப்பின் பிரதிலிப்புதான் மத்திய பட்ஜெட். அதிகமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும், காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கும் பட்ஜெட்டில் திட்டமிட்டு இருப்பது அனைத்து துறைகளிலிருந்தும் அரசாங்கம் விலகும் என்பதை வெளிப்படுத்துகிறது.

விவசாயிகள்

இது நாட்டை முழுவதுமாக வணிக நலனில் விட்டு விடுகிறது. புதிய விவசாய கொள்கைகளின் பாதையில் அரசு தொடர்ந்து செல்லும் என்பதையும், அது தனியார் ஏகபோகங்களுக்குத் வழி வகுக்கும் என்பதையும் பட்ஜெட் ஒப்புக்கொள்கிறது. விவசாயிகளின் அமைப்புகளுடான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பொய் என்றும், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அவர்கள் விரும்பவில்லை என்றும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும் பட்ஜெட்டுடன் உறுதி செய்துள்ளது.

மத்திய பட்ஜெட்

விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு அதிக கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அவர்களின் கடனை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை மோசமாக்கும். கோவிட்-19 தொற்றுநோய் பரவலால் வருமானத்தை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.