×

“கட்டடமே கட்டாமல் கணக்கு காட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ திநகர் சத்யா”

தியாகராய நகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், “2018-19ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டடமே கட்டாமல் 30 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதே போல 2017-18ஆம் ஆண்டு
 

தியாகராய நகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், “2018-19ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டடமே கட்டாமல் 30 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதே போல 2017-18ஆம் ஆண்டு எம்எல்ஏ உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவையனைத்தும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் செய்திருக்கிறார்.

இதற்காக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தகோரி உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 27ஆம் தேதி இந்த வழக்குகள் குறித்தும் லஞ்சஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.