×

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா வரமாட்டார்-  பண்ருட்டி ராமச்சந்திரன் 

 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும் மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் தனியாக இந்த முடிவிற்கு வர வில்லை.கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கொடுத்த தீர்ப்பை வைத்து தான் தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் போன்று தான் தற்காலிகமாக இதை அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தேர்தல் போன்று தான் தற்காலிகமாக இதை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு தற்காலிகமானது தான்.நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் அவர்களாக இந்த முடிவு எடுக்கவில்லை. இதை ஒரு பெரிய பிரச்சனையாக நாங்கள் கருதவில்லை.


கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் சின்னம் குறித்து அறிவிப்பதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. இந்த தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. சசிகலா இன்றும் அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும் என்று நம்புகிறார். எனவே, திருச்சி மாநாட்டிற்கு சசிகலா வந்தால் நடுநிலை தவறியதாக இருக்கும். சசிகலாவின் முடிவுக்கு நாங்கள் எப்பொழுதும் ஆதரவாக இருப்போம். நாங்கள் திமுகவிற்கு ஆதரவு அளிக்க தேவையில்லை. திமுக அணிக்கு யார் தயவும் தேவை இல்லை.என் அனுபவத்தை பொருத்தவரை சொல்லுகிறேன் தமிழ் மக்களை போல கெட்டிக்காரர்கள் யாரும் இல்லை. ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைத்திருக்காது. அதிமுகவிற்கு டெபாசிட் வாங்கி கொடுத்தது பாஜக. அவர்கள் இல்லை என்றால் டெபாசிட் இழந்திருக்கும்.


தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டதால் திருச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார், சசிகலா எல்லோரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறார். நாங்கள் சசிகலாவிற்கு உறுதுணையாக இருப்போம்..திருச்சி மாநாட்டிற்கு சசிகலா வந்தால் குந்தகம் ஏற்படும் அவருக்கு தர்ம சங்கடத்தை நாங்கள் ஏற்படுத்த மாட்டோம்” எனக் கூறினார்.