×

இந்த லட்சணத்தில்.. கடன் தள்ளுபடி : எடப்பாடியை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், நகைக்கடன், பயிர்க்கடன் என அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த கடன் தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதை விமர்சித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும்
 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், நகைக்கடன், பயிர்க்கடன் என அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த கடன் தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதை விமர்சித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சம் 85 ஆயிரம் கோடி! 2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ 65,994 கோடி பற்றாக்குறை! இந்தப் பற்றாக்குறையை நிரப்பவதற்கு தமிழ்நாடு அரசு மேலும் கடன் வாங்கப் போகிறது.

இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று திரு எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார். இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! “எனக்குப் பிறகு பிறளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியுள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் அதிமுக இலவச வாஷிங் மெஷின், கடன் தள்ளுபடி, இலவச சிலிண்டர் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசுக்கு 6 லட்சம் கோடி கடன் இருக்கும் சூழலில், அடுத்தடுத்து இலவசங்களை அதிமுக அள்ளி வீசுவது எதிர்க்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திருக்கிறது. அதன் எதிரொலியாகவே பி.சிதம்பரம் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.