×

“ரெய்டா நடத்துறீங்க ரெய்டு… சீக்கிரமே திருப்பி கொடுப்போம்” – திமுகவுக்கு ஓபிஎஸ் பகீரங்க எச்சரிக்கை!

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர் ஆகியோரின் சம்பந்தப்பட்ட வீடுகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். இதனை அதிமுக தலைமை வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து இபிஎஸ்-ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அரசியல் ரீதியாக எதிர்கொண்டு எங்களைச் சந்திக்க முடியாத திமுக,
 

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர் ஆகியோரின் சம்பந்தப்பட்ட வீடுகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். இதனை அதிமுக தலைமை வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து இபிஎஸ்-ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அரசியல் ரீதியாக எதிர்கொண்டு எங்களைச் சந்திக்க முடியாத திமுக, இப்படி அச்சுறுத்தலின் காரணமாக எந்த நிலையிலும் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டப்பூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதை அதிமுக சந்திக்கும். இன்றைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ரெய்டு மிகவும் கண்டனத்துக்குரியது. எந்த ஒரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது ஒரு அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியில் உருவாவதற்கு அடித்தளமாக அமையும் என்பது ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல பாடமாக அமைந்துள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கை சட்டப்பூர்வமாகத் தானே நடக்கிறது? என்றனர். அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், ”சட்டப்பூர்வமாக அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விஜயபாஸ்கர் இல்லத்தில் அவர்கள் நுழைந்துள்ளனர். இதற்குரிய பரிகாரம் உயர் நீதிமன்றம் மூலம் பெறப்படும்” என்றார்.